Blogroll
ஞாயிறு, 13 மே, 2012
ஸ்பானிய அல்ராமீராக்குகைச் சித்திரங்கள்
Posted on 12:46 AM by piragasart
ஸ்பானிய அல்ராமீராக்குகைச் சித்திரங்கள்
புராதன வரலாற்றுக் குகைச் சித்திரங்களிடையே வடஸ்பானியாவில் அமைந்துள்ள அல்ராமீராக்குகை ஓவியங்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.இக் குகை கி.பி1879 ல் கண்டுபிடிக்கப்பட்டது.இக் குகைக்கு அண்மையில் வாழ்ந்த சன்ராவோல் என்பவர் அப்பிரதேசத்தில் கிடந்த மிருக எலும்புகள்,கல் ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.ஒரு நாள் தனது மகளுடன் இக்காட்டில் இருண்டு கிடந்த அல்ராமீராக்குகையின் உள்ளே சென்றார்.
அப்பொழுது இவரது மகள் மாடு,மாடு எனப் பயந்து கத்திய சத்தம் கேட்டு அப்பகுதியை ஆராய்ந்த பொழுது குகைச்சுவர்களில் வரையப்பட்டு இருந்த பல்வகை அமைப்புடைய பைசன்

எருதுகள்,குதிரைகள்,பனிமான் போன்ற விலங்குகளின் வடிவங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தார்.இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வடிவம்,அபேவுயில் எனப் பெயர் கொண்ட கலைஞரால் பிரதிசெய்து வெளியிட்ட பின்னரே உலகிற்கு அறிமுகமானது.
அல்ராமீராக்குகையில் ஆதிமனிதனால் வரையப்பட்ட கலைச்சிறப்புடைய இச்சித்திரங்களிடையே பைசன் எருதின் வடிவம் முதல் இடத்தை வகிக்கின்றன.எருதின் இயற்கையான அங்க அசைவுத்தன்மைகள்,முக்காரமிடும்(கத்தும்) தன்மைகளை மிக உன்னிப்பாக அவதானித்து அவர்கள் வரைந்துள்ளனர்.நடன அமைப்பை நினைவூட்டு்ம் மெய்நிலையில் முன்னோக்கிப் பாய்வதற்கு ஆயத்தமாகும் எருதின் வடிவம் மிகவும் இயற்கையாகக் காணப்படுகிறது.
இளைப்பாறிக் கொண்டு இருக்கும் பைசன் எருதின் வடிவம்,ஓடுகின்ற எருது,சாதாரண நிலையில் உள்ள எருதின் வடிவங்கள் உயிர் துடிப்புடனும் தத்ரூபமாகவும் வரையப்பட்டு உள்ளன.
மேலும் குதிரைத்தலை,சிவப்பு மான்கள் இரண்டு உயிர்த்தன்மையைக் கொண்டு உள்ளன.இவை சிவப்பு,கறுப்பு,மஞ்சள்,நரை வர்ணங்களால் வர்ணம் தீட்டப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட உறுதியான வெளிக்கோடுகளுடன் காணப்படுகின்றன.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to "ஸ்பானிய அல்ராமீராக்குகைச் சித்திரங்கள்"
Leave A Reply